வெங்கடரமண சுவாமி கோவில் தெப்பத்தேர் திருவிழா நிறைவு
வெங்கடரமண சுவாமி கோவில் தெப்பத்தேர் திருவிழா நிறைவுகரூர்:தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்பத்திருவிழா நேற்று புஷ்ப யாகத்துடன் நிறைவு பெற்றது.கரூர் அருகே, தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த, 4ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. கடந்த, 10ல் திருக்கல்யாண உற்சவம், 12ல் தேர்த்திருவிழா, 14ல் தெப்பத்தேர் உற்சவம், 17ல் வெள்ளி கருட சேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மதியம், மாசி மக தெப்பத்திருவிழா நிறைவு நாளையொட்டி, மூலவருக்கு, சிறப்பு அபி ேஷகம் நடந்தது. அதன் பின், மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு, ஸ்ரீதேவி, பூதேவி உடனான உற்சவர் பெருமாளுக்கு, புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.