உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போலீசை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

போலீசை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

போலீசை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைதுகுளித்தலை:குளித்தலை அடுத்த, மாயனுார் எஸ்.எஸ்.ஐ., சிவக்குமார் மற்றும் இரண்டு போலீசார் கடந்த, 20 அதிகாலை மாயனுார், செல்லாண்டியம்மன் கோவில் அருகில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மகேந்திரா பிக்கப் சரக்கு வாகனத்தில், அரசு அனுமதியின்றி காவேரி ஆற்று மணலை. 10 சாக்கு மூட்டைகளில் ஏற்றிக்கொண்டு இருந்தவரை போலீசார் சுற்றி வளைத்தனர்.அப்போது, சரக்கு வாகன டிரைவர் திருக்காம்புலியூரை சேர்ந்த ராஜேஷ், 29, 'நான் யார் தெரியுமா என்னையா பிடிக்க போறீங்க' என கூறியபடி, மறைத்து வைத்திருந்த நீளமான கத்தியை காண்பித்து தப்பி ஓட முயன்றார். சுதாரித்த போலீசார், ராஜேைஷ துரத்தி பிடித்து, கைது செய்தனர். பின்னர் மணல் கடத்தி வந்தவாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி