உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உரூஸ் திருவிழாவிற்கு சுங்க ஏல தேதி மாற்றம்

உரூஸ் திருவிழாவிற்கு சுங்க ஏல தேதி மாற்றம்

உரூஸ் திருவிழாவிற்கு சுங்க ஏல தேதி மாற்றம்அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில் நடைபெறும், 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு, கடைகளுக்கான சுங்கம் வசூலிக்கும் ஏலம் தேதி வரும், 7ம் தேதி நடைபெறுகிறது.அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில், புகழ் பெற்ற சந்தனக்கூடு உரூஸ் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். வரும் 10 முதல், 15ம் தேதி வரை நடைபெறும், 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு, சுங்கம் வசூலிக்கும் உரிமை ஏலம் பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில், கடந்த 3ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது அதற்கான தேதியை மாற்றப்பட்டுள்ளது.இது குறித்து நகராட்சி கமிஷனர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஏலம் கோர விருப்பமுள்ளவர்கள், ரூ.1 லட்சம் முன்வைப்பு தொகையை ரொக்கமாக செலுத்தி ஏலம் கோரலாம்.வைப்புத்தொகை செலுத்தியவர்கள் மூடி முத்திரையிடப்பட்ட உரையில் ஒப்பந்த புள்ளியினை குறிப்பிட்டு, அலுவலகத்தில் ஏலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மூடி முத்திரையிடப்பட்ட உரைகள் வரும், 7ம் தேதி திங்கட்கிழமை பகிரங்க ஏலம் முடிந்தவுடன் வருகை தந்திருப்போர் முன்னிலையில் திறக்கப்படும்.ஏலம் முடிவுற்றதும், ஏலத்தொகை முழுவதையும் உடனடியாக அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதர ஏல நிபந்தனைகளை, நகராட்சி அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ