உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்

குளித்தலை, குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம், சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமையில் நடந்தது. தாசில்தார் இந்துமதி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஜெயவேல் காந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., படிவத்தை வாக்காளர்களிடமிருந்து பெற, இன்று, நாளை என, இரு தினங்களிலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், வாக்காளர் பதிவு அலுவலர் கலந்துகொண்டு வாக்காளர்களின் பெயர்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி துறை மூலம் பொது மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கேட்டுக்கொள்ளப்பட்டது. தி.மு.க.,-அ.தி.மு.க.,-பா.ஜ.,-தே.மு.தி.க.,-கம்யூ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை