மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் இருபெண்களிடம் நகை திருட்டு
23-Jan-2025
தங்க தாலி செய்து தருவதாக ஏமாற்றிய2 தொழிலாளிகள் மீது வழக்குப்பதிவுகரூர் :கரூரில், தங்க தாலி செய்து தருவதாக கூறி, ஏமாற்றிய இரண்டு தொழிலாளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 46; தங்க நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவர் கடந்தாண்டு டிச., 23ல் கரூரை சேர்ந்த குமார், 55; சபாபதி, 65; ஆகியோரிடம், ஒன்பது பவுன் தங்கத்தை கொடுத்து, தாலி செய்து தர ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால், இருவரும் குறிப்பிட்ட நேரத்தில், தங்கத்தாலியை செய்து தரவில்லை. இது குறித்து, சரவணன் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், குமார், சபாபதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
23-Jan-2025