உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீணை வாசித்து சாதிக்க புறப்பட்ட ஸ்ரீநிதி

வீணை வாசித்து சாதிக்க புறப்பட்ட ஸ்ரீநிதி

கரூர்: கரூரில் 8ம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுமி 16 மணி நேரம் தொடர் வீணை வாசித்து சாதனை புரியவிருக்கும் நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது. எம்.ஜி.ஆர்.,நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்- கல்பனா தம்பதியினரின் மகள் ஸ்ரீநிதிகார்த்திகேயன் (வயது 13 ) . இவர் பர்னிபார்க் பள்ளியில் படித்து வருகிறார். இளம் வயதிலேயே வீணை வாசிக்க கற்ற இந்தச்சிறுமி 16 மணி நேரம் தொடர்ந்து வாசித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற இன்று முயற்சித்துள்ளார். இன்று காலை நாரதகானசபாவில் இசைநிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரூர் தமிழிசைச்சங்கம் மற்றும் திருக்குறள் பேரவையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இசை நிகழ்ச்சியை காண இசைப்பிரியர்கள் பலர் குவிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை