உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இறைச்சி கடைகளில்திரண்ட அசைவ பிரியர்கள்

இறைச்சி கடைகளில்திரண்ட அசைவ பிரியர்கள்

கரூர்,:கரூரில், காணும் பொங்கலை முன்னிட்டு, இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.காணும் பொங்கலையொட்டி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை சமைத்து, குடும்பத்துடன் கொண்டாடுவது வாடிக்கையாக உள்ளது. அதன்படி, கரூர் மாநகர பகுதிகளில் உள்ள மட்டன் கடைகள், சிக்கன் கடைகள், மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.கரூர் வெங்கமேடு, கரூர் அன்சாரி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பொதுமக்கள் ஏராளமானோர் தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்ததால், பொதுமக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர். ஒரு கிலோ, 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆட்டு இறைச்சி, 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, கோழி, மீன் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ