உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் யூனியனில்எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா

கிருஷ்ணராயபுரம் யூனியனில்எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா

கிருஷ்ணராயபுரம்,: கிருஷ்ணராயபுரம் யூனியனில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவையொட்டி, கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், பாப்பகாப்பட்டி, லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, சேங்கல், சிந்தலவாடி, வேங்காம்பட்டி, புனவாசிப்பட்டி, நந்தன்கோட்டை, பிள்ள பாளையம், வல்லம் ஆகிய பகுதிகளில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் பாரி, கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமாரன், நகர செயலாளர் ராஜா, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை