உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து விழுந்தவர் பலிகுளித்தலை, : கரூர், சின்னாண்டாங்கோயில், பெரியசாமி நகரை சேர்ந்தவர் முருகேசன், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, 'ஸ்பிளண்டர்' டூவீலரில், பாளையம் - கரூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி டூவீலரில் இருந்து முருகேசன் தவறி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகன் கார்த்திக், 20, கொடுத்த புகார்படி, சிந்தா மணிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை