உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொண்டு நிறுவனத்தில் பொங்கல் கொண்டாட்டம்

தொண்டு நிறுவனத்தில் பொங்கல் கொண்டாட்டம்

தொண்டு நிறுவனத்தில் பொங்கல் கொண்டாட்டம் குளித்தலை : குளித்தலை கிராமியம் தொண்டு நிறுவனத்தில், நேற்று காலை குளித்தலை லயன்ஸ் சங்கம் மற்றும் குளித்தலை, முசிறி மேன்மை கல்வி பயிலகம் இணைந்து, பொங்கல் விழா கொண்டாடினர். முன்னாள் டி.எஸ்.பி., ராசன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கிராமியம் தொண்டு நிறுவன இயக்குனர் நாராயணன், பா.ஜ., மாநில துணைத்தலைவர் மீனா வினோத்குமார், காவிரி நதிநீர் இணைப்பு சங்க மாநில தலைவர் ஜெயராமன், கவிஞர் கடவூர் மணிமாறன், அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் டி.எஸ்.பி., மாணிக்கம், முன்னாள் ஆர்.டி.ஓ.,க்கள் ஜெயமூர்த்தி மாயவன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை