மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
06-Feb-2025
மாற்றுத்திறன் குழந்தைகளுக்குஇலவச மருத்துவ முகாம்கரூர்:கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான, இலவச மருத்துவ முகாம் நேற்று, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, 66 மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. முதல்வர் காப்பீடு திட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில், மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் மோகன்ராஜ், மாற்றுத்திறன் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ராதா, உதவி திட்ட அலுவலர் சிவராமன், பள்ளி தலைமையாசிரியர் ரேவதி உள்பட பலர் பங்கேற்றனர்.
06-Feb-2025