மேலும் செய்திகள்
சாலை அகலப்படுத்தும் பணி விரைந்து முடிக்க அறிவுரை
09-Feb-2025
பொக்லைன் இயந்திர வாகனத்தில் ஆபத்தை உணராமல் பயணம்
14-Feb-2025
Series Win பண்ண இப்படி Win பண்ணனும்
01-Feb-2025
சாலை அகலப்படுத்தும் பணியில் பணியாளர்கள்அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, நெடுஞ்சாலை துறை சார்பில் தாடிக்கொம்பு பகுதியில் இருந்து, பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி வரை, சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.பெருகிவரும் வாகன போக்குவரத்து காரணமாக, சாலை அகலப்படுத்துதல் பணி இன்றியமையாததாகி விட்டது. இந்நிலையில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2024-25ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ், கரூர் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் அகலப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணி நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக, அரவக்குறிச்சி வரை சாலை அகலப்படுத்தும் பணி விரைவாக நடந்து வருகிறது. அரவக்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டி பகுதியில், நேற்று நடந்த சாலை அகலப்படுத்தும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வினோத் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.
09-Feb-2025
14-Feb-2025
01-Feb-2025