நீதி கேட்பு போராட்டம்கைவிடப்பட்டது
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடக்கவிருந்த, நீதி கேட்பு போராட்டம் கைவிடப்பட்டது.கரூர் மாவட்டம், ரங்கநாதபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த மலையம்மாள் என்பவர், கடந்தாண்டு நவ., 23ல் இறந்து விட்டார். அவருக்கு, இறப்பு சான்று வழங்காததால், நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நீதி கேட்கும் போராட்டம் நடத்த போவதாக, பா.ஜ., பிரமுகர் நவீன் குமார் அறிவித்திருந்தார்.ஆனால், போராட்டம் நடத்த தான்தோன்றி மலை போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில், விசாரணை நடத்தி இறப்பு சான்று வழங்கப்படும் என, டி.ஆர்.ஓ., கண்ணன் உத்தரவிட்டுள்ளதால், நீதி கேட்பு போராட்டம் கைவிடப்பட்டதாக, பா.ஜ., பிரமுகர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.