புதிய தார்ச்சாலை பணிகோட்ட பொறியாளர் ஆய்வு
புதிய தார்ச்சாலை பணிகோட்ட பொறியாளர் ஆய்வுகுளித்தலை:குளித்தலை அருகே, புதிய தார்ச்சாலை பணியை ஆய்வு செய்யும் பணி நடந்தது. குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., கணக்கப்பிள்ளையூர் கள்ளங்காடு பீல்டு பிரிவு சாலை, 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் கற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள், விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். இச்சாலையை சீரமைத்து தர கோரி, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, 2024-25ம் நிதியாண்டில் ரூ.1.80 கோடியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் மூலம், புதிய தார்ச்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில் குமரன் ஆய்வு செய்தார். ஆர்.ஐ., சேகர். அரசு ஒப்பந்ததாரர் பழனிசாமி உடனிருந்தனர்.