போதையில் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி
போதையில் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலிகரூர்:கரூர் மாவட்டம், ராயனுார் ஆர்.கே.ஜி., நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 41; இவர் கடந்த, 16 ல் இரவு, செல்லாண்டிப்பாளையம் சாலையில், குடி போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி அருகே உள்ள, வாய்க்காலில் தவறி விழுந்தார். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாய்க்காலில் மூழ்கிய நிலையில் இருந்த, செந்தில் குமாரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் செந்தில் குமார் உயிரிழந்தார். செந்தில் குமாரின் மனைவி யோகேஸ்வரி, 34, கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.