அரவக்குறிச்சி அரசு கலைகல்லுாரியில் இலக்கிய விழா
அரவக்குறிச்சி அரசு கலைகல்லுாரியில் இலக்கிய விழாஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ் துறை சார்பில், பொன்னணி தமிழ் இலக்கிய மன்ற இலக்கிய விழா, தமிழ் துறை சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். சிறப்பாளராக பங்கேற்ற, அரவக்குறிச்சி வழக்கறிஞர் முகமது பஜ்லுல் ஹக், 'உன்னை உயர்த்தும் தமிழ் மற்றும் தமிழால் உயர்வோம்' என்ற தலைப்பில் மாணவர்களிடையே பேசினார். விழாவில், தமிழ் துறையின் தலைவராக பணியாற்றி வரும் முனைவர் காளீஸ்வரி முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முனைவர் சிந்து, முனைவர் முரளி ஆகியோர் செய்திருந்தனர்.