உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் விவசாய தொழிலாளர்கள்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் விவசாய தொழிலாளர்கள்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் விவசாய தொழிலாளர்கள்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்கரூர்,:தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பழி வாங்கக் கூடாது, மூன்று மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும். ஒரு நாள் சம்பளத்தை, 700 ரூபாயாக உயர்த்த வேண்டும், ஓராண்டுக்கான வேலை நாட்களை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும். சட்டப்படி வேலையின்மை படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் பாலன், துணைத்தலைவர் அஞ்சலி தேவி, துணை செயலாளர் ஆண்டியப்பன், பொருளாளர் தங்கராஜ், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் நாட்ராயன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி