உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அர்ச்சகர் வீட்டில் தங்க நகை திருட்டு

அர்ச்சகர் வீட்டில் தங்க நகை திருட்டு

அர்ச்சகர் வீட்டில் தங்க நகை திருட்டுகரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, அர்ச்சகர் வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற, இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார், 40; அர்ச்சகர். இவரது வீட்டில், நேற்று முன்தினம் பாட்டி தர்மாம்பாள், 82; என்பவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் நைசாக புகுந்த, அடையாளம் தெரியாத இரண்டு பேர், ஐந்தே கால் பவுன் தங்க செயினை திருடி கொண்டு தப்பினர். இதுகுறித்து, தீபக்குமாரின் மனைவி பானுபிரியா, 35, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை