உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே அள்ளப்படாதகுப்பையால் மக்கள் அவதி

கரூர் அருகே அள்ளப்படாதகுப்பையால் மக்கள் அவதி

கரூர் அருகே அள்ளப்படாதகுப்பையால் மக்கள் அவதிகரூர்:கரூர் அருகே, பல நாட்களாக தேங்கியுள்ள குப்பை அகற்றப்படாததால், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் -- ஈரோடு சாலை ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., மருத்துவ நகர் பகுதியில் அரசு பள்ளி மற்றும் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள், பல நாட்களாக அள்ளப்படாமல் உள்ளது. இதனால், குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பை அழுகி கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ள நிலையில், இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, மருத்துவ நகரில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை