மேலும் செய்திகள்
மின் இணைப்பு இல்லாததால் திறக்கப்படாத ரேஷன் கடை
25-Mar-2025
நிரந்தரமான ரேஷன் கடை எம்.எல்.ஏ.,விடம் மனுகிருஷ்ணராயபுரம்:புதுப்பட்டி கிராமத்திற்கு, புதிய ரேஷன் கடை தேவை என, அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம் மனு அளித்தனர்.குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கருப்பத்துார் பஞ்சாயத்து, புதுப்பட்டி கிராமத்தில், தற்காலிகமாக உள்ள ரேஷன் கடையில், பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த கடை வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. நிரந்தரமாக சொந்த கட்டடத்தில், ரேஷன் கடை செயல்படுவதற்காக அப்பகுதி மக்கள் சார்பில், குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட அவர், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
25-Mar-2025