மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் பட்டமளிப்பு விழா
12-Mar-2025
காந்திகிராமம் அரசு பள்ளியில்மாணவருக்கு பட்டமளிப்பு விழாகரூர்:கரூர் அருகே, காந்திகிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில், பட்டமளிப்பு விழா தலைமையாசிரியை பூங்கொடி தலைமையில் நடந்தது.அதில், மழலையர் வகுப்பை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு வட்டார கல்வி அலுவலர் கவுரி, பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். விழாவில், வட்டார மேற்பார்வையாளர் செல்வகுமார், துளிர் இயக்க பொறுப்பாளர் திலகவதி, மழலையர் வகுப்பு ஆசிரியைகள் தனலட்சுமி, லட்சுமி, உதவியாளர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, முதல் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடந்தது.
12-Mar-2025