உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாயிகளுக்கு விதை சான்றிதழ்நடைமுறை பயிற்சி வழங்கல்

விவசாயிகளுக்கு விதை சான்றிதழ்நடைமுறை பயிற்சி வழங்கல்

விவசாயிகளுக்கு விதை சான்றிதழ்நடைமுறை பயிற்சி வழங்கல்கிருஷ்ணராயபுரம்:பழையஜெயங்கொண்டத்தில், அட்மா திட்டத்தின் கீழ் விதை உற்பத்தியாளர்களுக்கு விதை சான்றிதழ் நடைமுறை பயிற்சி வழங்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மை மைய உதவி இயக்குனர் அரவிந்தன் தலைமை வகித்தார். இதில், மாநில விரிவாக திட்டங்களுக்கான உறுதி சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை 2024-25 இரண்டாவது தவணை திட்டத்தின் கீழ், விவாசாயிகளுக்கு விதை சான்றிதழ் நடைமுறை பயிற்சி வழங்கப்பட்டது. கரூர் விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றிளிப்பு குறித்து, உதவி இயக்குனர் மணிமேகலை, விதை பண்ணை பதிவு செய்யும் முறைகள், விதை ஆய்வு, களை மேலாண்மை உள்பட பல கட்ட முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. மண் பரிசோதனை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முரளி கிருஷ்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி