உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது பஸ் மோதிவாலிபர் படுகாயம்

பைக் மீது பஸ் மோதிவாலிபர் படுகாயம்

பைக் மீது பஸ் மோதிவாலிபர் படுகாயம்குளித்தலை: குளித்தலை அடுத்த, வடக்கு மயிலாடியை சேர்ந்தவர் சிவா, 23. இவர், தனக்கு சொந்தமான பைக்கில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் மணப்பாறை நெடுஞ்சாலையில், குளித்தலை நோக்கி வந்தார். அப்போது ரயில்வே கேட், பெட்ரோல் பங்க் அருகில் எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த சிவாவை, பொது மக்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்ன மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதுகுறித்து அவரது தந்தை பெரியசாமி கொடுத்த புகார்படி, தனியார் பஸ் டிரைவர் மணப்பாறை அமையபுரம் ஆனந்தராஜ், 34, மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ