உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கில் மணல் கடத்தல்வாலிபர் மீது வழக்கு

பைக்கில் மணல் கடத்தல்வாலிபர் மீது வழக்கு

பைக்கில் மணல் கடத்தல்வாலிபர் மீது வழக்குகுளித்தலை:குளித்தலை அடுத்த, வடையபட்டி குடித்தெருவை சேர்ந்தவர் வினோத்குமார், 31. இவர் கடந்த, 9 மதியம் 12:00 மணியளவில் தனக்கு சொந்தமான, அப்பாச்சி பைக்கில் அரசு அனுமதி இல்லாமல் மணல் மூட்டைகளை, குமாரமங்கலம் காவிரி ஆற்றில் இருந்து கடத்திச் சென்றார்.அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் வழி மறித்து அவரிடம் விசாரித்தனர். பின்னர் பைக், மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். குளித்தலை போலீசார், வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ