கால்வாய் வழித்தடத்தில் விழுந்துள்ள தீக்குச்சி மரம்
கால்வாய் வழித்தடத்தில் விழுந்துள்ள தீக்குச்சி மரம்கிருஷ்ணராயபுரம்:பழையஜெயங்கொண்டத்தில், மழை நீர் செல்லும் வழி தடங்களில் மரம் சாய்ந்து விழுந்து தடை ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அருகில், மழை நீர் செல்லும் வகையில் சிறிய கால்வாய் உள்ளது. கால்வாய் கரையில், பழமையான தீக்குச்சி மரம் உள்ளது. கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்ததில், தீக்குச்சி மரம் அடியோடு சாய்ந்து, மழை நீர் செல்லும் வழி தடத்தில் விழுந்துள்ளது. இதனால் மரக் கிளைகளால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.