உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் படுகாயம்

கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் படுகாயம்

அரவக்குறிச்சி: சீத்தப்பட்டி காலனி அருகே, டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, ஆர்.வெள்ளோடு அருகே வடகம்பாடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 48. இவர் நேற்று முன்தினம் இரவு, மதுரை - கரூர் தேசிய நெடுஞ்சா-லையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சீத்தப்பட்டி காலனி அருகே வந்த போது, எதிர் திசையில் உத்தர-பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் சர்மா என்பவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரி, டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் ராமச்சந்திரன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ