ரூ.3.85 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி. சாலை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் சார்பில், 355 மனுக்கள் அளிக்கப்பட்டது. மாற்றுத்-திறனாளிகள் நலத்துறை சார்பில், 60,000 ரூபாய்- மதிப்பில் நான்கு பயனாளிகளுக்கு நவீனசெயற்கை அவயமும், ஒருவருக்கு, 7,000 ரூபாய்- மதிப்பில் மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்கா-லியும், இருவருக்கு தலா, 2,835 ரூபாய் மதிப்பில் காதொலி கருவி என மொத்தம் எட்டு பேருக்கு, 3.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், ஆர்.டி.ஓ., முகமது பைசல், உதவி இயக்குனர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாற்றுத்திறனா-ளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.