மேலும் செய்திகள்
வேலாயுதம்பாளையம் அருகேமலைத்தேனீக்கள் அகற்றம்
18-Feb-2025
மூதாட்டியிடம் செயின் பறிப்புகரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, மூதாட்டியிடம் மர்ம நபர், தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார்.வேலாயுதம்பாளையம், நொய்யல் குறுக்கு சாலையை சேர்ந்தவர் காளியம்மாள், 77; இவர், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே, அபி ேஷக பொருட்கள் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பைக்கில் சென்ற வாலிபர் ஒருவர், காளியம்மாள் கடையில் பொருட்கள் வாங்குவது போல நடித்து, அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை வாங்கி பார்த்துள்ளார். பிறகு, கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க செயினுடன் தப்பினார். இது குறித்து, காளியம்மாள் கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
18-Feb-2025