அரவக்குறிச்சி கல்லுாரியில்ஆற்றுப்படுத்துதல் பயிற்சி
அரவக்குறிச்சி கல்லுாரியில்ஆற்றுப்படுத்துதல் பயிற்சிஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் பயிற்சி நேற்று நடைபெற்றது.அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியருக்கான ஆற்றுப்படுத்துதல் பயிற்சியை, முதல்வர் காளீஸ்வரி துவக்கி வைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராமஜெயம் சிறப்பாளராக பங்கேற்று, 'நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர், சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்பாடுகள் குறித்தும்' எடுத்துரைத்தார். முதல்வர் காளீஸ்வரி பேசுகையில், 'மாணவர்கள் ஆளுமையை வளர்ப்பதற்கும், சமூக நல எண்ணங்களை கற்பிக்கவும், நாட்டு நலப்பணி திட்டம் உதவுகிறது. இதன் மூலம், எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான திறன் மேம்படுத்தப்படுகிறது' என்றார்.நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் சிபி நன்றி கூறினார். நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு, சிறந்த தன்னார்வலர்களுக்கான பரிசு வழங்கப்பட்டது.