உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பழைய ஜெயங்கொண்டத்தில்வி.சி.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழைய ஜெயங்கொண்டத்தில்வி.சி.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழைய ஜெயங்கொண்டத்தில்வி.சி.கட்சியினர் ஆர்ப்பாட்டம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், வி.சி. கட்சி சார்பில் பழையஜெயங்கொண்டம், 12வது வார்டு பிரச்னைகளை தீர்க்க கோரி, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.டவுன் பஞ்சாயத்து நகர செயலர் முருகேசன் தலைமை வகித்தார். இதில், பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 12வது வார்டை தனி வார்டாக மாற்ற கோரியும். பூவாம்பாடி கிராமத்தில் அனைத்து அடிப்படை பிரச்னைகளை தீர்க்க கோரியும். 10வது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னை மற்றும் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள, 2.0 அம்ருத் திட்டம் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கரூர் கிழக்கு மாவட்ட செயலர் சக்திவேல், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலர் மகாமுனி, மண்டல செயலர் தமிழாதன், கிருஷ்ணராயபுரம் நகர செயலர் உதயநிதி மற்றும் பூவை பிரசாந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை