ஓய்வூதியர்கள் சங்கபொதுக்குழு கூட்டம்
ஓய்வூதியர்கள் சங்கபொதுக்குழு கூட்டம்கரூர்:கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க, பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமையில், கரூரில் நடந்தது.அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, மருத்துவ காப்பீடு அட்டையை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.மாநில பொதுச்செயலாளர் முத்தையா, பொருளாளர் இந்திரஜித், மாவட்ட தலைவர் ராஜவேல், மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.