உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணக்குவேலம்பட்டி ஊராட்சிபள்ளியில் ஆண்டு விழா

கணக்குவேலம்பட்டி ஊராட்சிபள்ளியில் ஆண்டு விழா

கணக்குவேலம்பட்டி ஊராட்சிபள்ளியில் ஆண்டு விழாஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி ஒன்றியம், புங்கம்பாடி கீழ்பாகம், கணக்குவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.விழாவை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளி தலைமையாசிரியர் வேலுமணி வரவேற்றார். உதவி ஆசிரியர் ஜெயலட்சுமி ஆண்டறிக்கையை வாசித்தார். விழா இறுதியில் பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை