உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவுநீர் கால்வாய்களை துார்வார வலியுறுத்தல்

கழிவுநீர் கால்வாய்களை துார்வார வலியுறுத்தல்

கழிவுநீர் கால்வாய்களை துார்வார வலியுறுத்தல்அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதில், ஆறாவது வார்டுக்குட்பட்ட ஜே.கே.நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பேப்பர், பொருட்கள் அடைத்து, கழிவுநீர் செல்ல முடியாதபடி நிரம்பி வழிகிறது. சில இடங்களில் செடிகள் புதராக வளர்ந்து, கழிவுநீர் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, கழிவுநீர் கால்வாயை முறையாக துார்வார, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை