நகை மதிப்பீட்டாளர் பயிற்சிவிண்ணப்பிக்க அழைப்பு
நகை மதிப்பீட்டாளர் பயிற்சிவிண்ணப்பிக்க அழைப்புகரூர்:கரூரில் உள்ள, திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பயிற்சி நிலையத்தில் நடக்க உள்ள, நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என, மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூரில் உள்ள, திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் ஏப்., 15ல் தொடங்குகிறது. பயிற்சி காலம், இரண்டு மாதம். அதற்கான விண்ணப்பங்கள் கரூரில் உள்ள, திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வரும் ஏப்., 13 வரை வழங்கப்படுகிறது. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.பயிற்சி கட்டணமாக, 4,550 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சியின் போது, நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். பயிற்சி முடிந்து சான்று பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட, அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு, 0431-2715748, 99946-47631 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.