கொய்யாப்பழம் விற்பனை தீவிரம்
கொய்யாப்பழம் விற்பனை தீவிரம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், கொய்யாப்பழம் சீசன் துவங்கியதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்கல், திருக்காம்புலியூர், புதுப்பட்டி, பஞ்சப்பட்டி, மாயனுார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக கொய்யா மரங்களை வளர்த்து வருகின்றனர். தற்போது மரத்தில் கொய்யா பழங்கள் பழுத்து வருகிறது. அதை பறித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் என்பதால் கிலோ, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் கொய்யா பழங்களை வியாபாரிகள் விற்று வருகின்றனர்.