உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முன்விரோத தாக்குதல்இருதரப்பினர் மீது வழக்கு

முன்விரோத தாக்குதல்இருதரப்பினர் மீது வழக்கு

முன்விரோத தாக்குதல்இருதரப்பினர் மீது வழக்குகுளித்தலை:குளித்தலை அடுத்த செங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 29; விவசாய கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 38; இருவருக்கும் இடையே நிலப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. கடந்த, 2 இரவு, 7:00 மணிக்கு, செங்காட்டுப்பட்டி வடக்கு களம் சுடுகாடு அருகே, சக்திவேல், அவரது அண்ணன் செல்வராஜ், 40, தாயார் சீரங்கம்மாள், 60, ஆகிய மூவரும், சதீஷ்குமாரை தகாத வார்த்தையால் திட்டி, குச்சியால் தாக்கியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார், மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, செல்வராஜ், சீரங்கம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதே வழக்கில், சீரங்கம்மாள் கொடுத்த புகார்படி, சதீஷ்குமார், 29, இவரது அண்ணன் சிவக்குமார், 31, ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !