உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கரூர்:கரூர் அருகே கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் ராசி நகரை சேர்ந்தவர் மணிவேல் மோகன், 54; இவருக்கு கடந்த, ஐந்தாண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த, 12ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிவேல் மோகன், இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் மணிவேல் மோகன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஸ்ரீதேவி, 48, போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !