கிருஷ்ணராயபுரம் பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கத்திரிக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம், பஞ்சப்பட்டி, வீரியபாளையம், பாப்பகாப்பட்டி, குரும்பப்பட்டி, லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி, வயலுார், சரவணபுரம், வேங்காம்பட்டி, மகிளிப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது அதிகமாக கத்திரிக்காய் செடிகள் நடவு செய்யப்படுகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. காய்கள் பறிக்கப்பட்டு உள்ளூர் சந்தைகளில் விற்பனை நடக்கிறது. கடந்த மாதம் முதல் கத்திரிக்காய் விலை உயர்ந்து விற்பனை நடக்கிறது. நேற்று கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது.