முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிவேக சைக்கிள் போட்டி
கரூர்: தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, கரூரில், மாவட்ட அளவிலான அதிவேக சைக்கிள் போட்டி இன்று நடக்கிறது என, தி.மு.க., மாவட்ட செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:முதல்வர் ஸ்டாலின், 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்களுக்கு அதிவேக சைக்கிள் போட்டி கரூர் அரசு கால-னியில் இன்று (மார்ச் 2) மதியம், 3:00 மணிக்கு நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடம் பெறுவோருக்கு பரிசாக, 15 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை, இரண்டாமிடம் பெறுவோருக்கு பரிசாக, 12 ஆயிரம் ரூபாய், கோப்பை, மூன்றா-மிடம் பிடிப்பவருக்கு பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், கோப்பை வழங்கப்படும். நான்காமிடம் முதல், 10-ம் இடம் வரை பெறு-வோருக்கு பரிசாக, 3,000 ரூபாய், கோப்பை வழங்கப்படும்.கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்-கேற்க முடியும். இதில் பங்கேற்க விரும்புவோர், 98424 55424, 94425 41752 மற்றும் கரூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தை தொடர்-புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.