உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இணை ஆணையர் நடவடிக்கைக்கு தடை வீட்டுமனை உரிமையாளர் சங்கம் தகவல்

இணை ஆணையர் நடவடிக்கைக்கு தடை வீட்டுமனை உரிமையாளர் சங்கம் தகவல்

கரூர்: ''ஹிந்து சமய அறநிலையத்துறை, திருப்பூர் இணை ஆணையரின் நடவடிக்கைகளுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்-துள்ளது,'' என, கரூர் வீட்டுமனை உரிமையாளர்கள் நலச்சங்க பொருளாளர் முத்துராமன் தெரிவித்தார்.கரூரில் நடந்த, நிர்வாகி கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, முத்துராமன் நிருபர்களிடம் கூறியதாவது:கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள பிளாக், 52, 53, 54ல் உள்ள, அரசு தாவா செட்டில்மென்ட் வீட்டுமனை பட்டா நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் என, நீதிமன்றங்-களில் சிவில் வழக்குகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை திருப்பூர் இணை ஆணையர், தாவா செட்டில்மென்ட் வீட்டு மனைகள், கோவிலுக்கு சொந்தமானவை எனவும், அதை காலி செய்து, கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த மே, 30ல் உத்தரவிட்டார்.அதை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை கடந்த ஜூலை, 26ல் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஹிந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையர் ஆணைகளுக்கு தடை விதித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட முன்னாள் காங்., தலைவர் பாங்க் சுப்பிரமணியம் உள்பட வீட்டுமனை உரிமையாளர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை