கரூர் மலர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கரூர்,: கரூர், தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்-ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தலைமை வகித்தார். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு நடனம் ஆடியும், கிருஷ்ணர் செயல்களை குறிப்பிட்டும் பேசினர். கிருஷ்ணருக்கு பிடித்த பொருட்களை கொண்டு வந்து குழந்தைகள் காட்சிப்படுத்-தினர். கிருஷ்ணனை பற்றிய வாழ்க்கை குறிப்பு குறித்து, ஆசி-ரியர் பீனா ராய் விளக்கினார்.நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயசித்ரா, நிர்வாக அலுவலர் வித்யா, ஆசிரியர் துளசி உள்பட பலர் பங்கேற்றனர்.