உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் செப்., 14ல் ரேஷன் குறைதீர் கூட்டம்

கரூரில் செப்., 14ல் ரேஷன் குறைதீர் கூட்டம்

கரூர்: கரூர் மாவட்டத்தில், ரேஷன் குறைதீர் கூட்டம் வரும், 14ல் நடக்-கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது: கரூர் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய அட்டை கோருதல் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு குறைதீர் கூட்டம் வரும், 14ல் நடக்கிறது. கரூர், அர-வக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்-ணராய-புரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்-தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்-கிறது. பொதுமக்கள், குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு, பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறை-களை தீர்வு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை