உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் நிழற்கூடம்பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சியில் நிழற்கூடம்பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சியில் நிழற்கூடம்பொதுமக்கள் எதிர்பார்ப்புஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.அரவக்குறிச்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. அரவக்குறிச்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம், காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டார போக்குவரத்து என அரசு சார்ந்த அலுவலகங்கள், வங்கிகள் செயல்படுகின்றன.ஆனால், அரவக்குறிச்சியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏவிஎம் கார்னர் மற்றும் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக மழையிலும், வெயிலிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.பஸ் ஸ்டாண்ட்தான் இல்லையென்றால், பயணிகள் நிழற்கூட வசதியும் செய்து தரவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். காந்தி சிலை அருகே உள்ள நிழற்கூடம், மது பிரியர்களின் கூடாரமாக மாறிவிட்டது.தேர்தல் நேரத்தில், கட்சிகளின் வாக்குறுதிகளில் அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்டும் இடம் பெற்று வருகிறது.ஆனால் செயல்பாட்டுக்கு இதுவரை வரவில்லை. கடுமையான வெப்பம் நிலவி வரும் இந்த நிலையில், குறைந்தபட்சம் பயணிகள் தங்க நிழற்கூட வசதியை செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ