உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில்சுகாதார வளாகம்

மோசமான நிலையில்சுகாதார வளாகம்

மோசமான நிலையில்சுகாதார வளாகம்கிருஷ்ணராயபுரம்:கட்டளை கிராமத்தில், பொது சுகாதார வளாகத்தை சுற்றி புதர்கள் மண்டி மோசமான நிலையில் காணப்படுகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, ரெங்கநாதபுரம் பஞ்சாயத்து கட்டளை கிராமத்தில், பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக, சுகாதார வளாகத்தை சுற்றி அதிகளவில், புதர்கள் மண்டி செடிகள் வளர்ந்து வளாகத்திற்கு உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் மக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்தாமல் உள்ளனர். புதர்கள், முள் செடிகளை அகற்றி துாய்மைப்படுத்தி, மக்கள் சென்று வரும் வகையில் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை