உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண்களுக்கான பாதுகாப்புவிழிப்புணர்வு கூட்டம்

பெண்களுக்கான பாதுகாப்புவிழிப்புணர்வு கூட்டம்

பெண்களுக்கான பாதுகாப்புவிழிப்புணர்வு கூட்டம்கரூர்:கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப் பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளமதி தலைமை வகித்தார். குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள், பெண்களுக்கான பாலியல் தடுப்பு சட்டம்-2013, போக்சோ சட்டம், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், பள்ளி கல்வித்துறையின் உதவி எண் 14417, குழந்தைகளுக்கான பாதுகாப்பு மைய உதவி எண் 1098, பெண்கள் பாதுகாப்பு உதவி எண் 181 பற்றியும் விரிவாக கூறப்பட்டது.நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் பரணிதரன், துணைத்தலைவர் பூங்கோதை, ஆசிரியர்கள் தெரசாராணி, ஜெயபாரதி, புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி