க.பரமத்தியில் தீயணைப்புநிலையம் அமைக்கப்படுமா?
க.பரமத்தியில் தீயணைப்புநிலையம் அமைக்கப்படுமா?கரூர்:க.பரமத்தியில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி பஞ்சாயத்து யூனியனில், 30 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையையொட்டி, கிராம பஞ்சாயத்துக்கள் அடங்கியுள்ளதால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அப்போது, வாகனங்கள் தீ பிடித்து எரிந்தாலோ, தீ விபத்துக்கள் ஏற்பட்டாலோ, அதை அணைக்கும் வகையிலும், உயிரிழப்புகளை தடுக்கவும், க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை.இதனால், க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால், கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் எளிதாக செல்ல முடியாது. இதனால் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.