உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கி.புரத்தில் பா.ஜ.,ஆலோசனை கூட்டம்

கி.புரத்தில் பா.ஜ.,ஆலோசனை கூட்டம்

கி.புரத்தில் பா.ஜ.,ஆலோசனை கூட்டம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில் ஆலோசனை கூட்டம் கொசூரில் நடந்தது.கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில், பா.ஜ., கட்சி உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு, மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மத்திய அரசு திட்டம் குறித்து மக்களுக்கு விரிவாக எடுத்து கூறுதல், வார்டு வாரியாக பூத் கமிட்டி அமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து பேசப்பட்டது. கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் சாமிதுரை, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ