உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பக்தர்கள் பால்குட ஊர்வலம்

பக்தர்கள் பால்குட ஊர்வலம்

குளித்தலை:குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி பாலம் கிழக்கு தெரு மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை மருதுார் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இரவு, கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இன்று மதியம், கிடா வெட்டுதல், அக்னிசட்டி, அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்துதல், இரவு மாவிளக்கு ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நாளை காலை, திருவிழாவின் இறுதி நாளில் கரகம் ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழா, அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை