மேலும் செய்திகள்
சமுதாய வளைகாப்பு
23-Feb-2025
சமுதாயவளைகாப்பு
06-Mar-2025
100 கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு குளித்தலை:குளித்தலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் வினோதினி தலைமை வகித்தார். குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா, ஒன்றிய தி.மு.க., செயலர் தியாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அரசின் திட்டங்கள் குறித்து, எம்.எல்.ஏ., மாணிக்கம் பேசினார். விழாவில், 100 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம் தடவி கையில் வளையல் போட்டு கர்ப்பிணிகள் தங்களது குழந்தைகளை வளர்த்தல், உணவு பழக்கவழக்கங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. விழாவில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. ஊட்டச்சத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
23-Feb-2025
06-Mar-2025