உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிளஸ் -2 பொதுத்தேர்வு நிறைவு மாணவ, -மாணவியர் உற்சாகம்

பிளஸ் -2 பொதுத்தேர்வு நிறைவு மாணவ, -மாணவியர் உற்சாகம்

பிளஸ் -2 பொதுத்தேர்வு நிறைவு மாணவ, -மாணவியர் உற்சாகம்கரூர்:பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்ததால், மாணவ, -மாணவியர் உற்சாகம் அடைந்தனர்.தமிழகத்தில் கடந்த மார்ச், 3ல் பிளஸ் 2 தேர்வு துவங்கியது. கரூர் மாவட்டத்தில், 4,774 மாணவர்கள், 5,491 மாணவியர் என மொத்தம், 10,265 பேர் தேர்வு எழுதினர். கடந்த, 21ல் வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுகள் நடந்தன. இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்கள் ஆகிய தேர்வுகள் நேற்று நடந்தன. நேற்றுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு பெற்றது.விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 4ம் தேதி துவங்க உள்ளது. தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதையொட்டி மாணவ, -மாணவியர் உற்சாகமாக துள்ளிக் குதித்து பள்ளியிலிருந்து வெளியேறினர். சில மாணவ, -மாணவியர் பள்ளி பருவம் முடிந்ததால், பிரிவை நினைத்து கண்ணீர் சிந்தியதையும் பார்க்க முடிந்தது. பின், தேர்வு மையத்தை விட்டு வெளியே சென்ற மாணவர்கள் தங்களது நண்பர்களுடனும், மாணவியர் தங்களது தோழிகளுடனும் கேக் வெட்டி கொண்டாடி, மொபைல்போனில் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ